< Back
மாநில செய்திகள்
அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

தினத்தந்தி
|
7 Dec 2022 12:15 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் அம்பேத்கரின் 66-வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அம்பேத்கர் நினைவு நாள்

சட்ட மேதை அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவுநாள் நாமக்கல்லில் நேற்று பல்வேறு கட்சிகள் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அண்ணாசிலை அருகில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் வணங்காமுடி, மாநில துணை செயலாளர் பழ.பாலு, மாவட்ட செய்தி தொடர்பாளர் நீதிநாயகம், நாமக்கல் தொகுதி செயலாளர் ஆற்றல் அரசு, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் செல் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு அரசு எஸ்.சி.எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மாநில இணை செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் மஞ்சுநாதன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி மாவட்ட பயிற்சி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

குமாரபாளையம்

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குமாரபாளையம் நகர குழு சார்பாக அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகர குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு, பரமத்திவேலூர்

திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தங்கராசு, முருகேசன், கதிர்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனர். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அமைப்பு சாரா தொழிலாளர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜெயராமன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் தனசேகரன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல பரமத்திவேலூர் தாலுகா, சேளூர் செல்லப்பம்பாளையத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பரமத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பரமத்தி நகர செயலாளர் சுந்தரம், ஒன்றிய செயலாளர் கிள்ளிவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்

ராசிபுரம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து நகர செயலாளர் ஆதவன் தலைமையில் ஊர்வலமாக சென்று சிவானந்தா சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் பழனிச்சாமி, நகர துணை செயலாளர்கள் விஜயகுமார், சுகுவளவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் கனகராஜ், நிர்வாகிகள் பென்சமீன், ஆதி தமிழன், கண்ணன், சுரேஷ் பீட்டர், விஜி, கார்த்தி, மாயவன், சதீஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி சிவானந்தா சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் நகர பொருளாளர் சலீம், துணைச் செயலாளர் சாதிக், திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் பிடல் சேகுவாரா, இளைஞர் பெருமன்றத்தின் தாலுகா தலைவர் வேம்பு, நகர குழு உறுப்பினர் பையாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் செல்வராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் செல்வராஜ், மாதர் சங்க மாவட்ட தலைவர் ராணி, நகர செயலாளர் சண்முகம், புதுப்பாளையம் கிளைச் செயலாளர் துரை உள்பட பலர் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசிய திராவிட கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் முருகேசன் தலைமையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ராசிபுரம் நகர செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் முருகேசன், பழனி, பூவரசன், எழில், கோபி, மற்றும் கண்ணன் திருக்கனியன் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்