நாமக்கல்
ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
|நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சேந்தமங்கலம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள் தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொல்லிமலையில் ஜெயலலிதாவின் நினைவுநாள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் கழக அமைப்பு செயலாளருமான சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஊர்வலம் அங்குள்ள ஏரிக்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மேடு பஸ் நிலையம் வரை சென்று முடிந்தது. ஊர்வலத்துக்கு கொல்லிமலை ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி, துணைச் சேர்மன் கொங்கம்மாள் நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ராஜமாணிக்கம், பிரகாசம், அரியூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதையடுத்து செம்மேடு பஸ் நிலைய வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு சந்திரசேகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் அட்மா குழு சேர்மன் பொரணிக் காடு பொன்னுசாமி, செம்மேடு சிவன், சேந்தமங்கலம் பேரூர் செயலாளர் ராஜேந்திரன், கொல்லிமலை தெற்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ் சந்திரசேகரன், காளப்பநாயக்கன்பட்டி பழனிசாமி உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
நாமகிரிப்பேட்டை
இதேபோல் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி உள்பட பல இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க தலைவருமான இ.கே.பொன்னுசாமி, அவைத்தலைவர் மங்களபுரம் ஜோதி உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மேற்கு ஒன்றிய பகுதியில் பல இடங்களில் நடந்தது. இதையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினா் அஞ்சலி செலுத்தினர். நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.பி.எஸ்.சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.கலாவதி, ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் மணிகண்ணன், செந்தில்குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிரபு மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ராசிபுரம்
இதேபோல் ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்பட நகரம் முழுவதும் முக்கிய இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி. கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.கலாவதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுரேஷ்குமார், ராசிபுரம் நகர வங்கி துணைத் தலைவர் வெங்கடாசலம், நகர அவை தலைவர் கோபால், மாவட்ட பிரதிநிதிகள் ஜெகன், சீனிவாசன் ராதா சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.