< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிப்பு
|25 July 2023 1:00 AM IST
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம் அருகில் தியாகி சுப்பிரமணிய சிவாவின் உருவப்படத்துக்கு சங்க மாவட்ட பொருளாளர் சிலம்பரசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்திற்கு சென்று அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதி செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் வேலாயுதம், ரஜினி, ராஜசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி செயலாளர் சின்னசாமி, நிர்வாகி சக்திவேல், கிளை செயலாளர் அர்ஜூனன், சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.