< Back
மாநில செய்திகள்
நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தினத்தந்தி
|
14 July 2023 1:21 PM GMT

வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரி நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

வாணாபுரம்

வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி திருவண்ணாமலையில் உள்ள நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தத்தெடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கினார். பதிவாளர் தமிழ்வேந்தன், வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் சண்முகம் கலந்து கொண்டு கையெழுத்திட்டார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

விழாவில் பேராசிரியர்கள் பாலாஜி, ஏங்கல்ஸ் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்