< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பழங்குடியினர் உரிமை வழங்கல் குழுவில் உறுப்பினர் சேர்க்கை
|4 Aug 2022 9:41 PM IST
பழங்குடியினர் உரிமை வழங்கல் குழுவில் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் வன உரிமைச்சட்டம் 2005-ன்படி பழங்குடியினர் வன உரிமை வழங்கல் தொடர்பாக மாவட்ட அளவிலான குழு உள்ளது. இந்த குழு மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக இந்த குழுவுக்கான உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் இந்த மாவட்ட அளவிலான குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை விண்ணப்பங்களை தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.