< Back
மாநில செய்திகள்
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கனிமொழி எம்.பி.யிடம் வாழ்த்து
தென்காசி
மாநில செய்திகள்

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கனிமொழி எம்.பி.யிடம் வாழ்த்து

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

தென்காசி மாவட்ட திட்டக்குழு தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கடையநல்லூர்:

தென்காசி மாவட்ட வளர்ச்சி பணிகளின் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாவட்ட திட்டகுழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் மாவட்ட குழுத் தலைவி தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட குழு துணை தலைவர் உதய கிருஷ்ணன், கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான முருகன் மற்றும் பூங்கொடி, மதி மாரிமுத்து உட்பட அனைத்து திட்டக்குழு உறுப்பினர்கள் முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மா.செல்லத்துரை மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஆகியோர் தலைமையில் சங்கரன்கோவிலில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.யை சந்தித்து வெற்றிச்சான்றிதழ்களை கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், கடையநல்லூர் ஒன்றிய துணை சேர்மன் ஐவேந்தர் தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்