< Back
மாநில செய்திகள்
மேலூர் பஸ் நிலையம் இன்று முதல் மூடல்
மதுரை
மாநில செய்திகள்

மேலூர் பஸ் நிலையம் இன்று முதல் மூடல்

தினத்தந்தி
|
4 March 2023 1:45 AM IST

ரூ.6½ கோடியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதையொட்டி மேலூர் பஸ் நிலையம் இன்று முதல் மூடப்படுகிறது.

மேலூர்,

மேலூரில் பஸ் நிலையம் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ளது. அதனையடுத்து மேலூர் பஸ் நிலைய கட்டுமான பணிகள் இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது என மேலூர் நகராட்சி தலைவர் முகமதுயாசின் தெரிவித்துள்ளார். எனவே பஸ் நிலையம் இன்று முதல் மூடப்படுகிறது. கட்டுமான பணிகள் முடியும் வரை அனைத்து டவுன் பஸ்களும் அழகர்கோவில் ரோட்டில் சுந்தரப்பான் கண்மாய் அருகில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது. எனவே கட்டுமான பணிகள் முடியும் வரை பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் தற்காலிக பஸ் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு நகராட்சி தலைவர் முகமதுயாசின் தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்