< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"மேகதாது விவகாரம்: தமிழகம் தலையிடக் கூடாது.." - கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார்
|22 Sept 2023 9:48 PM IST
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தலையிடக் கூடாது என கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டியது அரசின் கடமை. இந்த விவகாரத்தில் இரு மாநில மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதில் ஆணையம் என்ன முடிவெடுக்கின்றதோ அதனை பின்பற்ற வேண்டும் எனவும் , மேலும் மேகதாது விவகாரத்தில் தமிழகம் தலையிடக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் முறையாக கிடைக்கும் போது கர்நாடக பகுதிகளில் அணை கட்டுவதில் அனைத்து உரிமையும் உண்டு இதனை தடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளதாக அவர் கூறினார்.
மேகதாது விவகாரம் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது டி.கே.சிவக்குமார் இது பற்றி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..