< Back
மாநில செய்திகள்
தமிழக அரசின் அனுமதி இல்லாமல்  மேகதாது அணை கட்ட முடியாது- மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
மதுரை
மாநில செய்திகள்

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது- மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தினத்தந்தி
|
1 Jun 2023 3:18 AM IST

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்


சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவோம் என்று கூறியிருப்பது முடியாத ஒன்று.

அதற்கு தமிழக அரசு அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது. தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளுக்கு தற்காலிகமாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள குறைபாடுகளை நீக்கி மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்