மேகதாது அணை விவகாரம் - தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் : துரைமுருகன்
|மேகதாது அணை விவகாரத்தில் மக்களின் உரிமைகளை காக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
சென்னை ,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆறு, விவசாயத்திற்கும் பெருமளவு பயன்பட்டு வருகிறது. ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது.இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைகளை காக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது என துரைமுருகன் தெரிவித்துள்ளார் .