< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராணிப்பேட்டையில் ரூ.400 கோடி செலவில் மெகா தோல் பூங்கா - திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
|11 July 2023 5:21 PM IST
மெகா தோல் பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோல் பூங்கா அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெகா தோல் பூங்காவை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் இதற்கான அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.