பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஊக்கமளிக்கிறது - நடிகர் ரிஷப் ஷெட்டி
|பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஊக்கமளிக்கிறது என்று நடிகர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் யெலஹங்கா விமான நிலையத்தில் 'ஏரோ இந்தியா 2023' நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக பெங்களூரு வந்த பிரதமர் மோடியை கே.ஜி.எப் பட நடிகர் யாஷ் மற்றும் காந்தாரா பட இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் மறைந்த புனித்ராஜ்குமார் குடும்பத்தினர் நேரில் சந்தித்து பேசினர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பரவி வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஊக்கமளிக்கிறது. புதிய இந்தியா மற்றும் முற்போக்கு கர்நாடகத்தை வடிவமைப்பதில் பொழுதுபோக்குத் துறையின் பங்கை நாங்கள் விவாதித்தோம். #BuildingABetterIndia-விற்கு பங்களிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உங்கள் தொலைநோக்குத் தலைமை எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. அந்த ஊக்கம் எங்களோட மிகப்பெரிய பலம்" என பதிவிட்டுள்ளார்.