< Back
மாநில செய்திகள்
வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
13 Oct 2023 5:00 AM IST

வடமதுரை தி.மு.க சார்பில் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வடமதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

வடமதுரை தி.மு.க சார்பில் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வடமதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடமதுரை தி.மு.க. நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பையன், பேரூராட்சி தலைவர் நிரூபராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாச்சிமுத்து கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற களப்பணியாற்றுவது குறித்து வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் அய்யலூர் நகர செயலாளர் கருப்பன், வடமதுரை நகர அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், நகர துணை செயலாளர்கள் வீரமணி, அழகுமலை, தேன்மொழி, பொருளாளர் முரளிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்