< Back
மாநில செய்திகள்
வாக்குச்சாவடி முகவர் கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வாக்குச்சாவடி முகவர் கூட்டம்

தினத்தந்தி
|
5 April 2023 12:30 AM IST

கொடைக்கானல் நகர தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடந்தது.

கொடைக்கானல் நகர தி.மு.க. சார்பில் சி.பா.ஆதித்தனார் திருமண மண்டபம், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், கொடைக்கானல் நகர செயலாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டங்களில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், நகர துணைச் செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, கோமதி, சக்திவேல், அவைத் தலைவர் மரிய ஜெயந்தன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்