< Back
மாநில செய்திகள்
வரும் 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தலைமைக் கழகம் அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வரும் 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தலைமைக் கழகம் அறிவிப்பு

தினத்தந்தி
|
8 Nov 2023 8:07 PM IST

அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் 21ஆம் தேதி அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 21.11.2023 - செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு, பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்