< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு
|4 May 2023 12:30 AM IST
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் பாம பிரியா, கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டும், பள்ளி வாகன சிறப்பு விதிகளுக்கு உட்பட்டு முறையாக பராமரிப்பது, விபத்து இல்லாமல் எவ்வாறு வாகனங்களை இயக்குவது, உரிய ஆவணங்களை நடப்பில் வைத்திருப்பது, டிரைவரின் உடற்தகுதி குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி வாகனங்களை ஆய்வுக்குழு முன் குறிப்பிட்ட தேதியில் ஆஜர்படுத்தி உரிய அனுமதி பெற்று இயக்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில் தனியார் பள்ளிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.