< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

தினத்தந்தி
|
13 March 2023 12:15 AM IST

கெலமங்கலத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

ராயக்கோட்டை

கெலமங்கலம் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், முன்னாள் நகர செயலாளர் திம்மராயப்பா, தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் ஜெயராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணரெட்டி, தலைமை கழக பேச்சாளர்கள் அன்புகரசு, விஜிய தைலான் ஆகியோர் கலந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சையத்அசேன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதிஷ், நிர்வாகிகள் செந்தில்குமார், அல்லாஹ் பகாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்