தர்மபுரி
அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
|பாலக்கோட்டில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
பாலக்கோடு
பாலக்கோடு பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட அவைத்தலைவர் நாகராசன், வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் செந்தில், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பஞ்சப்பள்ளி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், பஞ்சாட்சரம் ஆகியோர் கலந்து கொண்டுபேசினர்.
கூட்டத்தில் கே.பி.அன்பழகன் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எண்ணேகொல்புதூரில் இருந்து தும்பலஅள்ளி அணைக்கு கால்வாய் அமைக்கும் திட்டம், அளியாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவார்கள் என பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் விமலன், வீரமணி, புதூர் சுப்ரமணி, மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.