கிருஷ்ணகிரி
தி.மு.க. செயற்குழு கூட்டம்
|ஓசூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணை செயலாளர் முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், மண்டல தலைவர் ஆர்.ரவி, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், ஓசூர் மாநகர கிழக்குபகுதி செயலாளர் ஜி.ரவி மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.