கிருஷ்ணகிரி
ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
|ஓசூரில் ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
ஓசூர்
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், ஓசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் துரை வரவேற்றார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செயல் அறிக்கை வாசித்தார். இதில் மாநில பொருளாளர் ஜெயசந்திரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். மாநில அளவில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஓய்வூதியர்களை திரட்டி, இம்மாத கடைசி வாரத்தில் சென்னையில் மாநில கோரிக்கை சிறப்பு மாநாடு நடத்துவது. இந்த மாநாட்டிற்கு சத்துணவு துறை அமைச்சர் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை அழைப்பது என்பது உள்ளிடட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட பொருளாளர் சீனிவாசலு நன்றி கூறினார்.