< Back
மாநில செய்திகள்
அ.ம.மு.க. பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அ.ம.மு.க. பொதுக்கூட்டம்

தினத்தந்தி
|
28 Feb 2023 12:15 AM IST

பாகலூரில் அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா பாகலூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் எம்.மாரேகவுடு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் அன்வர் பாஷா வரவேற்றார்.

இதில், கட்சியின் அமைப்பு செயலாளர்கள் டி.கே.ராஜேந்திரன், ஆர்.ஆர்.முருகன், தலைமை கழக பேச்சாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாநகர செயலாளர்கள் வீரையா, சாய்கிரண், தொழிற்சங்க நிர்வாகி சிங்காரவேல், வர்த்தக அணி நிர்வாகி மணிவண்ணன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கினர். முடிவில், ஓசூர் ஒன்றிய செயலாளர் ராஜப்பா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்