< Back
மாநில செய்திகள்
பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
11 Feb 2023 12:15 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 தாலுகாவில் பொதுவினியோகத்திட்ட குறை தீர்க்கும் சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. கூட்டத்திற்கு அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமை தாங்குகிறார்கள். அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் பி.கே.பெத்தனப்பள்ளி, ஊத்தங்கரை மண்ணாடிப்பட்டி, போச்சம்பள்ளி குடிமேனஅள்ளி, பர்கூர் கண்ணன்டஅள்ளி, சூளகிரி உத்தனப்பள்ளி, ஓசூர் நல்லூர் அக்ரஹாரம், தேன்கனிக்கோட்டை சூளிகுண்டா மற்றும் அஞ்செட்டி தாலுகா மரியாளாம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது. எனவே இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர்களிடம் மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்