< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பள்ளிபாளையம் நகராட்சி கூட்டம்
|28 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நேற்று நடந்தது. தலைவர் செல்வராஜ் தலைைம தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொது சுகாதார பணிகளை மேற்கொள்ள ஒரு ஆண்டுக்கான செலவை மத்திய நிதி குழுவில் இருந்து ஒதுக்கீடு செய்வது, கணினிகள், பிரிண்டர்கள் பராமரிப்புக்காக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்வது, கே.ஆர்.பி. நகர் முதலாவது வீதியில் சிறுபாலம் அமைக்க ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து காரசார விவாதம் நடத்தினர். இதில் துணைத்தலைவர், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.