கிருஷ்ணகிரி
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
|ஊத்தங்கரையில் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவரணி துணை அமைப்பாளர் குப்புராஜ் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பாபுசிவக்குமார் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர்கள் ரஜினி செல்வம், எக்கூர் செல்வம், குமரேசன், நரசிம்மன், வசந்தரசு, பேரூராட்சி தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் பூங்கா நகர் கண்ணன், ஆற்காடு அகிலன், மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், பொருளாளர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நகர அவைத்தலைவர் தணிகை குமரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் தினகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலீல், மணிகண்டன், சின்னத்தாய், ஜெயமணி திருப்பதி, விஜயகுமார், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியநாராயண மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்பேரூர் மாணவரணி அமைப்பாளர் அருள்ராஜ் நன்றி கூறினார்.