கிருஷ்ணகிரி
பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம்
|ஓசூரில் பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
ஓசூர்
பா.ஜனதா கட்சியின் எஸ்.டி. அணி மாநில செயற்குழு கூட்டம், ஓசூரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில எஸ்.டி. அணி செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளரும், எஸ்.டி. அணியின் பொறுப்பாளருமான சதீஷ்குமார், மாநில எஸ்.டி. அணி தலைவர் சிவப்பிரகாசம், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பிக்குநாத் நாயக் உள்பட கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறுகையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. பழங்குடி மக்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் 10 சதவீதமும், மத்திய அரசில் 7½ சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. குறைந்த பட்சம், மத்திய அரசு வழங்குவதை போன்று இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து பழங்குடி மக்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, பழங்குடி மக்களை ஒன்று திரட்டி, கட்சியின் மாநில தலைமையின் அனுமதியுடன், அடுத்த மாதம் சென்னையில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.