கிருஷ்ணகிரி
அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
|கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், காவேரிப்பட்டணம் பேரூராட்சி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கேசவன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை அனைத்திற்கும் தி.மு.க. அரசு மூடு விழா நடத்திவிட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று பேசினார்.
இதில், இலக்கிய அணி துணை செயலாளர் சேகர், தலைமைக்கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் முனிவெங்கடப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயா ஆஜி, சங்கீதா கேசவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் நன்றி கூறினார்.