கிருஷ்ணகிரி
குடியரசு தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
|கிருஷ்ணகிரியில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரியில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
குடியரசு தின விழா
நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 26-ந் தேதி நடைபெறுகிறது. கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஆலோசனை
இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். குடியரசு தினவிழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். விழாவில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், உதவி கலெக்டர் சதீஷ்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.