< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்

தினத்தந்தி
|
28 Dec 2022 12:15 AM IST

கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.

ராயக்கோட்டை

கெலமங்கலம் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் 98-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. நகர துணை செயலாளர் குர்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி ஏற்றி வைத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா, நகர செயலாளர் மதுக்குமார் முன்னாள் நகர செயலாளர் நாகராஜ் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், இளைஞரணி நகர தலைவர் சாதிக், மாவட்ட குழு உறுப்பினர் சியாமளா எ. ஐ.ஒய்.எம். மாவட்ட துணை செயலாளர் ராஜேஸ்வரி மற்றும் ஊராட்சி தலைவர்கள் கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்