கிருஷ்ணகிரி
பேரிடர் மேலாண்மைத்துறை பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்
|கிருஷ்ணகிரியில் பேரிடர் மேலாண்மைத்துறை பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மை செயலர் குமார்ஜெயந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நத்தம் சிட்டா திருத்தம், இணையதள பட்டா மாறுதல், இணையதள வாரிசு சான்று, வருவாய் துறை கட்டிடங்கள், இ-அடங்கல் மற்றும் மின் ஆளுமை உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
இதில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் (நிலம் எடுப்பு) பவனந்தி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலவரித்திட்டம்) பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.