< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
22 Dec 2022 12:15 AM IST

ஓசூரில் பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஓசூர்

ஓசூரில், பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் நந்தகுமார், மாவட்ட துணைத்தலைவர்கள் முருகன், சகுந்தலா என்ற ஸ்வேதா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் மனோகர், அன்பரசன், விஜயகுமார், மாவட்ட செயலாளர் பிரவீண்குமார், பொருளாளர் சீனிவாசன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், அணிகளின் மையக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள், அடையாள அட்டைகளை மாவட்ட தலைவர் நாகராஜ் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

மேலும் செய்திகள்