கிருஷ்ணகிரி
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
|கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினார்கள். கூட்டத்தில், சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றிற்காக தி.மு.க. அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும், 13-ந் தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதியிலும், 14-ந் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய செயலாளர் வேடி நன்றி கூறினார்.