கிருஷ்ணகிரி
அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
|கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.
ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை சார்பில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ், எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு உட்பட்ட 10 கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், டி.மதியழகன், கே.பி.முனுசாமி, அசோக்குமார், தமிழ்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர் மற்றும் தளி தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களால் பரிந்துரை செய்யப்பட்ட பணிகளுக்கான சாத்தியக் கூறுகள் மற்றும் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பும் பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்மொழிவுகள்
இந்த கூட்டத்தில் 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் நிறைவேற்றபட வேண்டிய பணிகள் குறித்து எடுத்து கூறி உள்ளீர்கள். இது குறித்து அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.