< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்
|22 Nov 2022 12:15 AM IST
ஓசூரில் நடந்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரகாஷ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஜி.ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.