< Back
மாநில செய்திகள்
தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
17 Nov 2022 12:15 AM IST

ஊத்தங்கரையில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

ஊத்தங்கரை:

ஊத்தங்கரையில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பாபு சிவக்குமார் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர்கள் ரஜினி செல்வம், எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, பேரூர் அவைத்தலைவர் தணிகை குமரன், ஒன்றிய துணை செயலாளர்கள் குமரேசன், பட்டாபி, சின்ன பாப்பா, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெற்றி பெற பாடுபட வேண்டும். அதற்கு கட்சி பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் முன்னாள் எம். எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், சுகவனம், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மாலதி நாராயணசாமி, தலைமை கழக பேச்சாளர் லயோலா ராஜசேகர், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைச்செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசு மூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி குப்புராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்