< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
13 Oct 2022 12:15 AM IST

ஓசூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஓசூர்:

ஓசூரில், மாநகர மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓசூரில், பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கி பேசினார். அப்போது கட்சியின் பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இதில், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் எம்.அசோகா, ராஜி, மஞ்சுநாத் மற்றும் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், ஒன்றிய செயலாளர்கள் ஹரீஷ் ரெட்டி, ரவிகுமார், பாகலூர் ஊராட்சி துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி, வட்ட செயலாளர் குபேரன் என்ற சங்கர் மற்றும் சூடப்பா, பாலு, தேவன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்