தர்மபுரி
பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டியில் கிராம சபை கூட்டம்
|பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டியில் கிராம சபை கூட்டம்
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்திையயொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பென்னாகரம் அடுத்த மாங்கரை ஊராட்சி வண்ணாத்திப்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மணி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மாதையன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஊராட்சியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பென்னாகரம் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் ரவி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வேளாண் துறையினர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.