< Back
மாநில செய்திகள்
உலக அமைதி நாள் விழிப்புணர்வு கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

உலக அமைதி நாள் விழிப்புணர்வு கூட்டம்

தினத்தந்தி
|
2 Sept 2022 10:33 PM IST

தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு உலக அமைதி நாள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இந்திய தொழிற்சங்க மையத்தின் தர்மபுரி மாவட்ட குழுவின் சார்பில் உலக அமைதி நாள் விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜீவா, மாநில செயலாளர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் உலக அமைதி குறித்து பேசினார்கள். உலகத்தில் எந்த இடத்திலும் போரை தவிர்க்க வேண்டும். நாடுகளிடையே அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் தொழிலாளர்கள் வெள்ளை கொடி மற்றும் மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்