தர்மபுரி
தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
|பொம்மிடியில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடியில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளா் முத்துக்குமார், நகர செயலாளர் கவுதமன், நிர்வாகி சத்யமூர்த்தி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தனேந்திரன், ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் பொம்மிடியில் இருந்து ஏற்காடு மலை பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட பிரதிநிதிகள் பன்னீர்செல்வம், ராமன், ரவி, ஊராட்சி தலைவர்கள் அன்பழகன், திருமலா தினேஷ், தகவல் தொழில்நுட்ப பணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோகுல்நாத், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், தாரணி ராஜேஷ் ஒன்றிய துணைச் செயலாளர்கள் செல்வம், ராஜேந்திரன், சாகிதா செரிப், பொன்மணி, ஈஸ்வரன், செல்வம், தொ.மு.ச. மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.