< Back
மாநில செய்திகள்
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

தினத்தந்தி
|
24 Aug 2022 10:47 PM IST

தர்மபுரியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மணி தலைமை தாங்கினார். சங்க மாநில தலைவர் சுப்பராயன் எம்.பி., மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி, தேசிய செயலாளர் வகிதா நிஜாம் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் சங்க மாவட்ட நிர்வாகிகள் மாதேஸ்வரன், மணி, முருகன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் பொதுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் தலா ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 240 நாள் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். போக்குவரத்து கழகங்கள், நுகர் பொருள் வாணிப கழகம், மின்வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு வருகிற 30-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடத்தும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்