< Back
மாநில செய்திகள்
ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
17 Aug 2022 9:32 PM IST

காரிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

காரிமங்கலம்:

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அடிலம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் தீபா அன்பழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராணி நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் தாசில்தார் சுகுமார் கலந்து கொண்டார். கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜ், பெருமாள், ஊராட்சி செயலாளர் மூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெரியாம்பட்டி ஊராட்சியில் தலைவர் ஜெயலட்சுமி சங்கர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் துணைத்தலைவர் கல்பனா, ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். காளப்பனஅள்ளி ஊராட்சியில் தலைவர் நந்தினிபிரியா செந்தில்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் துணைத் தலைவர் சங்கர், செயலாளர் வெங்கடேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பூமாண்டஅள்ளி, பைசுஅள்ளி, கோவிலூர், மல்லிக்குட்டை கெரகோடஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் தலைவர்கள் கவிதா நாகராஜன், மகேந்திரன், தமிழ்செல்வி நந்திசிவம், பச்சையம்மாள் சிவராஜ், சாந்தி சம்பத் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் துணைத்தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திண்டல் ஊராட்சியில் தலைவர் உமா குப்புராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் துணை தலைவர், ஊராட்சி செயலர் மகேந்திரன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்