< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க. விவசாய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பா.ஜ.க. விவசாய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தினத்தந்தி
|
10 Aug 2022 10:44 PM IST

கெலமங்கலத்தில் பா.ஜ.க. விவசாய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.

ராயக்கோட்டை:

கெலமங்கலம் சமுதாய கூடத்தில் பா.ஜ.க. மேற்கு ஒன்றிய விவசாயி அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் அணி தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜூ முன்னிலை வகித்தார். விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவிந்த ரெட்டி, மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினர். முன்னதாக ஒன்றிய செயலாளர் சென்னீராப்பா வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், நெசவாளர்கள் பிரிவு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மருத்துவ பிரிவு டாக்டர் நாகேஷ், விவசாய அணி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் முனிராஜ், துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, துணைத்தலைவர் ஸ்ரீனிவாசரெட்டி, ஒன்றிய தலைவர் சந்துரு, ஒன்றிய செயலாளர் ரூபாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் மஞ்சுநாத் ரெட்டி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்