< Back
மாநில செய்திகள்
ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம்

தினத்தந்தி
|
2 Aug 2022 11:02 PM IST

தர்மபுரியில் ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.

தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மாநில செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் மணி, சுதர்சனன், மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தர்மபுரி, பாலக்கோடு, தொப்பூர் ரெயில் நிலையங்களில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் அனுமதி இல்லாமல் வெளியில் இருந்து வரும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா கால நிவாரண உதவியாக அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். தாட்கோ வங்கி மூலம் ஆட்டோ வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் கடன் வசதி செய்து தர வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்