< Back
மாநில செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தினத்தந்தி
|
31 July 2022 10:00 PM IST

ஏ.பள்ளிபட்டியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தத.

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் அதியமான் தலைமை தாங்கினார். துணை தலைவர் இந்திராணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மாதையன் வரவேற்றார். கூட்டத்தில் பள்ளியை மேம்படுத்த இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும். சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடுவது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவது. பள்ளி விளையாட்டு மைதானம் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர் சீதா, வார்டு உறுப்பினர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்