தர்மபுரி
திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
|தர்மபுரியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சந்திரமோகன் வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்லதுரை, மகேஷ்குமார், சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திராவிட இயக்க வரலாறு குறித்து நாஞ்சில் சம்பத் பேசினார். மாநில சுயாட்சி குறித்து தமிழ் அமுதரசன் பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், ஆறுமுகம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தங்கமணி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கவுதமன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.