தர்மபுரி
திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
|பாப்பிரெட்டிப்பட்டியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்லத்துரை, சிட்டி பாபு, மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் வரவேற்று பேசினார். இதில் திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மாநில சுயாட்சி எனும் தலைப்பில் தமிழ் அமுதரசன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நிர்வாகி சத்யமூர்த்தி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தங்கமணி, முனிராஜ், மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் சக்தி, முத்துகுமார், ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரபு ராஜசேகர், சித்தார்த்தன், தனபால் நெப்போலியன், ஜெகநாதன், நகர செயலாளர்கள் ஜெயசந்திரன், கவுதமன், மோகன், முன்னாள் ஒன்றிய செயலாளா் ராசு தமிழ்செல்வன் மற்றும் ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள்,கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன் நன்றி கூறினார்.