< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
|29 July 2022 10:18 PM IST
கெலமங்கலத்தில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
ராயக்கோட்டை:
கெலமங்கலத்தில் ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், பட்டியல் அணி மாநில துணைத்தலைவி கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினர். இதில் மாவட்ட பஞ்சாயத் ராஜ் தலைவர் ராஜேஷ்குமார், நிர்வாகி ஆனந்த், மாவட்ட செயலாளர் வரலட்சுமி, மண்டல தலைவர்கள் சீனிவாஷ், ரவி, செயலாளர் ரூபாஜி, பேரூராட்சி தலைவர் கோவிந்தப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் பொது செயலாளர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.