< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
20 July 2022 10:20 PM IST

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சமரசம், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ்கிருஷ்ணன், பையூர் ரவி, முருகன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பது, துணை பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமியை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதற்கு வரவேற்பு தெரிவிப்பது, சொத்துவரி, மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவிப்பது, சின்னசேலம் அருகில் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் சரியாக செயல்படாத தி.மு.க. அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் தங்கமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், பேரூராட்சி செயலாளர் விமல், ஐடி பிரிவு வேலன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் மக்புல், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, மகளிர் அணி கல்பனா உள்பட பலர் பங்கேற்றனர். மத்தூர் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்