< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
18 July 2022 10:16 PM IST

தர்மபுரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 349 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்த மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண உத்தரவிட்டார்.

கடந்த வாரம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தையல் எந்திரம் கோரி மனு அளித்த தொப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி நவாசுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, கலால் உதவி ஆணையர் தணிகாசலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்