தர்மபுரி
நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
|தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் வள ஆதார மேம்பாட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் வள ஆதார மேம்பாட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம்
நீர்வள ஆதாரங்கள் மற்றும் ஆறுகள் மேம்பாட்டுக்காக ஜல் சக்தி அபியான் அமைச்சகம் உருவாக்கப்பட்டு நேரடியாக நீர் வள ஆதாரங்களை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆய்வு செய்ய ஜல் சக்தி அபியான் அமைச்சக நிதி ஆயோக் இயக்குனர் சுப்ரதா பிரகாஷ், தொழில் வல்லுநர் அஜய் ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் தர்மபுரிக்கு வந்தனர்.
இந்த குழுவினர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ஜல் சக்தி அபியான் திட்டம் செயல்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் கலெக்டர் சாந்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகள் குறித்தும், மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல் சக்தி கேந்திரா மையம் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
பார்வையிட்டனர்
இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி பொறியாளர் பாலாஜி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சங்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் நீர்வள ஆதார பணிகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.