< Back
மாநில செய்திகள்
வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்

தினத்தந்தி
|
13 July 2022 10:08 PM IST

கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பட்டா பெயர் மாற்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றம், முதியோர் உதவித்தொகை, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமரேசன், உதவி கலெக்டர் சதீஷ்குமார், தாசில்தார்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்